வெல்லாவெளியில் ஒரே குட்டையில் மனிதனும் விலங்குகளும் தண்ணீர் அருந்தும் அவலம்:

சோமாலீயா ருவாண்டா நாடுகளைப் போலாகும் எமது தமிழ்கிராமங்கள்.

ஒருகுட்டையில் மனிதனும் விலங்குகளும் தண்ணீர் அருந்தும் அவலம். இன்னொருபக்கம் குடிநீர் இருந்தும் விற்பனைக்கு உறுஞ்சப்படும் அவலம்.
எம்தமிழர்களின் வளங்கள் அவலம் அபயம் என கேள்விக்குறியாகிக்கொண்டு செல்லும் நிலை.

நிருவாகத்தில் உரீமைமீறல்.நில அபகரிப்பு மதமாற்றாம்….எம்மை எமது இறைவனால்மட்டுமே காப்பாற்ற முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட மாலையர்கட்டு கிராம மக்கள் குடிநீர் வசதியின்றி ஆற்று நீரை வடித்து குடிநீரக சுமந்து செல்கின்றனர் இவர்கள் இதுவரைக்கும் எந்த ஒரு அரச உத்தியோகத்தர்களின் கண்ணிலும் தென்படவில்லையா?

அல்லது மக்களும் எருமை மாடுகளும் ஒன்றாக ஆற்று மணலில் கிடப்பதை இதுவரைக்கும் நீங்கள் அவதானிக்கலயா..

பல தடவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் எடுத்துக் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை ஏன் எல்லைக் கிராமங்களில் வாழும் பாமர மக்களை அரச அதிகாரிகள் கவனத்தில் எடுப்பதில்லை;

இக் கிராம உத்தியோகஸ்த்தர்கள்!Eorld vision ehed sewalanka போன்ற பன்னாட்டுதனியார்நிறுவனங்களின் கவனத்திலாவது கொண்டுவந்து எம்மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வுகாணும்படி வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி

 

Author: ram arivu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *