பிரான்சில் வீடுகளின் விலையில் பாரிய மாற்றம்

ஐரோப்பிய நாடுகளில் முன்னணி நாடக திகழும் பிரான்ஸ் , தனது புதிய அத்தியாயத்தை தொடங்க காலடி எடுத்து வைக்கவிருக்கின்றது ,

அதி இளம் வயதையுடைய ஜனாதிபதியான இம்மானுவே மக்குரோன் ஐரோப்பிய நாடுகளின் பண சுமையை சீர் செய்யும் வகையில் புதிய சட்டங்களை அமுல்படுத்தி பிரான்ஸ் நாட்டை ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு உதாரணமாக எடுத்து செல்லவுள்ளார்.

இதன் முதல் கட்டமாக வீடுகளின் விலையில் பாரிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது , உதாரணமாக இன்று 500 000 யூரோ பெறுமதியான வீடு புதிய வரிச் சலுகையின் படி 400 000 யூரோவாக விலை குறைவடையும் ,

ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட பிரான்சில் வாழும் மக்களில் அதிகளவானோர் வாடகை குடியிருப்புக்களில் வசித்து வருகின்றனர் , இதனால் வருமானம் காணாதவர்களுக்கு அரசு இந்த வாடகையில் ஒருபகுதியை அவர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதால் , அரசின் பணம் அதிகளவாக விரயமாக்குகின்றது , இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணச் சுமை அதிகரிக்கின்றது.

இதனை காரணமாக கொண்டே இந்த புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது , இந்த சட்டங்கள் இந்த வருட இறுதியில் அல்லது 2019 மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: ram arivu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *