திலீபனின் நினைவு இடத்தில் குழப்பங்களும் கேவலமான அரசியல் நகர்வுகளும்

தமிழ் மக்களுக்கான அகிம்சை போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தியாக தீபத்தின் நினைவை அரசியலாக்கி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றவும் , குழப்பவும் சில அரசியல் கட்சிகள் முயன்று வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆனாலும் தமிழ் மக்களின் எந்தவொரு துயரிலும் பங்கெடுக்காத அரசியல்வாதிகள் ஊடகங்களை தம் பினாமிகளாக்கி மக்களை சுலபமாக ஏமாற்றி அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கை பொறுத்தமட்டில் போரின் சிதைவுகளில் இருந்து மக்கள் என்னும் வெளிவரமுடியாமல் இருக்கின்றார்கள் , குடும்ப உறவுகளை தொலைத்து விட்டு அனாதைகளாகி அடிமை வாழ்க்கையையே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப்படியான மக்களை இலக்குவைத்து தான் அரசியல்வாதிகள் தமது கேவலமான அரசியல் நகர்வுகளை நடத்துகின்றனர் ,

இது தெரியாது புலத்தில் நாம் தான் புலிகள் என கூறுவோர் வேறு பாதையில் சென்று மக்களை பாரிய குழப்பத்தில் தள்ளி விடுகின்றனர்.

போராட்டம் முடிவடைந்து போராளிகள், அவர்களில் பிள்ளைகள் ஒரு நேர உணவுக்கு வழியின்றி தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் ,
அவர்களுக்கு வாழ வழி செய்து கொடுப்பதை விடுத்து

நாம் தான் திலீபனின் நினைவை நடத்துவோம் என சண்டை பிடித்து மாவீரர்களின் தியாகங்களை கேவலப்படுத்தி,  புகைப்படங்களை முகநூலிலும் இணையங்களிலும் வெளியிட்டு நீங்கள் செய்யும் அரசில் சித்து விளையாட்டுக்களை நிறுத்திவிட்டு; தமிழ் மக்களின் துயரில் பங்குகொள்ளுங்கள்.

Author: ram arivu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *