குடி நீர் இன்றி தவிக்கும் புங்குடுதீவு மக்கள்

புங்குடுதீவில் இலவசநீரை வழங்குவதற்கு வடஇலங்கை சர்வோதயம் என்ற தனியார் நிறுவனம் பிரதேச செயலாளரால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது . ஆனால்  அந்த நிறுவனம் சீராக நீரை வழங்குவதில்லை. இதை பலதடவை கூட்டங்களில் பலரால் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டும் இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இதனால் சிறுவர்கள் உட்பட பலர் உவர்ப்பு நீரையே பருக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ,

புலம்பெயர் நாடுகளில் பல புங்குடுதீவு ஒன்றியங்கள் இருக்கின்றன , ஆனால் எந்தவொரு அமைப்பும் இவர்களை கண்டுகொள்ளாதது ஏன் ? இவர்களின் துயர் துடைக்க யாராவது முன் வருவார்களா ?

புலம்பெயர் வாழ் புங்குடுதீவு அமைப்புக்கள் இது உங்கள் கவனத்துக்கு…….

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *