492 நாட்களாக வீதியிலே தம் உறவுகளைத்தேடி போராடிக்கொண்டிருக்கும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள்

492 நாட்களாக வீதியிலே தம் உறவுகளைத்தேடி போராடிக்கொண்டிருக்கும்
காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளின் போராட்டம் யாருமே கண்டுகொள்ளவில்லை,

அந்த வீதியினால் எத்தனை பிரதிநிதிகள் சென்றிருப்பார்கள் தமிழ் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட தமிழர்களை கண்டுகொள்ளவில்லை என்பது
எந்த விதத்தில் நியாயமாகும்!!!

செகுசுவாகனங்களின் மயக்கத்தில் இந்த போராட்டம் மறைந்து போனதா? அல்லது இதர சலுகைகளால் இறங்கிவந்து பார்க்கக்கூட நேரமற்று போனதா!! இதயமற்றவர்களே
நீங்கள் வாழும் வாழ்க்கை வசதியெல்லாம் இவர்கள் இட்ட பிச்சையே!!

வாக்குகளை பெற்றுவிட்டு பாராளுமன்றத்தில் தேவையில்லாத விடயங்களுக்கு மைக்கை எடுத்து கத்துவதை விடுத்து இந்த மக்களின் பிரச்சனைகளுக்கு நேரில் சென்று தீர்வு பெற்றுக்கொடுங்கள்.

ஒரு முறையாவது இவர்களையும் எட்டிப்பாருங்கள் ,

உணர்வுடன் ஆத்தித்தன்

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *