விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­ 14 தமி­ழர்கள் இலங்­கைக்குள் நுழை­வ­தற்குத் தடை

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில், வெளி­நா­டு­களில் வசிக்கும் 14 தமி­ழர்கள் இலங்­கைக்குள் நுழை­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான சிறப்பு வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று முன்­தினம் பாது­காப்புச் செயலர் கபில வைத்­தி­ய­ரத்­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

2016 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட தடைப் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ள 86 தனி­ந­பர்கள் பட்­டி­ய­லுடன், இந்த 14 பேரும் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். ஐ.நா ஒழுங்கு விதிகள் சட்­டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு தடை செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் பெயர் விப­ரங்கள் வரு­மாறு;

நட­ராஜா சத்­தி­ய­சீலன் அல்­லது சீல் மாறன்,

கம­ல­சிங்கம் அரு­ண­சிங்கம் அல்­லது கமல்,
அன்­ர­னி­ராசா அன்­ரனி கெலிஸ்டர் அல்­லது பரதன்,
சிவ­சுப்­ர­ம­ணியம் ஜெய­கணேஸ் அல்­லது கணேஸ் அல்­லது சாம்ராஜ்,
பொன்­னு­சாமி பாஸ்­கரன் அல்­லது ஜெய­கரன்,
வேலா­யுதம் பிர­தீப்­குமார் அல்­லது கலீபன்,
சிவ­ராசா சுரேந்­திரன் அல்­லது வரதன்,
சிவ­கு­ரு­நாதன் முரு­கதாஸ் அல்­லது கதி­ரவன்,
திரு­நீ­ல­கண்டன் நகு­லேஸ்­வரன் அல்­லது புஸ்­ப­நாதன்,
மகேஸ்­வரன் ரவிச்­சந்­திரன் அல்­லது மென்டிஸ் அல்­லது திருக்­கு­மரன்,
சுரேஸ்குமார் பிரதீபன்,
கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி,
ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர்,
டோனி ஜியான் முருகேசபிள்ளை.
ஆகியோரே இந்த தடை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்களை அரசு உரிமையாக்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *