பாலைவனத்தில் இறக்கிவிடப்படும் அகதிகள்: 48 டிகிரி வெயிலில் செத்துமடியும் கொடூரம்!

அல்ஜீரியாவில் அகதிகளாக நுழைபவர்களை தகிக்கும் 48 டிகிரி வெயிலில் இறக்கிவிடப்படும் அவலம் கடந்த பல மாதங்களாகவே அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் சுமார் 13000 அகதிகள் அவ்வாறு இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

சோமாலியா, நைஜீரிய போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரின் காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் அல்ஜீரியாவில் குடியேறுவதற்காக நுழைபவர்கள் அங்கிருந்து விரட்டப்படுகிறார்கள். குறிப்பாக துப்பாக்கி முனைகளில் மிரட்டப்பட்டு தினமும் காலை 8 மணிமுதல் லாரிகளில் ஏற்றப்பட்டு சஹாரா பாலைவனத்தில் இறக்கிவிடப்படுகிறார்கள்.

கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 13,000 பேர் அவ்வாறு கொண்டுவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பசி, தாகம் மற்றும் வெயிலின் தாக்கத்தால் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இவர்களில் சிலர் பல மைல்கள் நடந்து அசமாக்கா எனும் கிராமத்தை அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மேலும் சிலரை ஐநா மீட்புக் குழு மீட்டுள்ளது. அல்ஜீரிய அரசின் இந்த செயலை ஐ.நா கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தனது மீதான குற்றச்சாட்டை அல்ஜீரிய அரசு மறுத்துள்ளது.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *