தொடர்ச்சியாக வெடிக்கும் ஹவேய் தொலைபேசிகள் ,அவதானம்

ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதில் மலேசிய நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய முதலீட்டு மூலதன நிதியகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நாஸ்ரின் ஹசன் பணிபுரிந்து வருகிறார். இவர் ஹவேய் வகை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், அவர் படுக்கை அறையில் தனது இரண்டு ஸ்மார்ட் போன்களையும் சார்ஜ் செய்துள்ளார். அப்போது திடீரென அந்த இரண்டு செல்போன்களில் ஒன்று சூடாகி வெடித்தது. சார்ஜில் இருக்கும்போதே எதிர்பாராமல் வெடித்ததால் நாஸ்ரின் ஹசன் அதிர்ச்சி அடைந்தார்.

இதில் படுக்கை அறை முழுவதும் தீ பரவியது. இதிலிருந்து வெளி வரமுடியாமல் படுக்கை அறையிலேயே நாஸ்ரின் ஹசன் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், நாஸ்ரின் ஹசன் தீ விபத்தால் உயிரிழக்கவில்லை என்றும் வெடித்துச் சிதறிய போன் பாகங்கள் அவரது பின் தலையில்பட்டு அதிர்ச்சியில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

எச்சரிக்கை , தொலைபேசியை சார்ச் செய்யும் பொழுது எந்தவொரு காரணத்துக்காகவும்
அதை பயன்படுத்தவேண்டாம் , இதன் காரணமாகவே அதிக கைத்தொலைபேசிகள் வெடித்து சிதறுகின்றன , அதிக மலிவான விலையில் நீங்கள் வாங்கும் தொலைபேசிகளில் உள்ள மின்கலம் (பற்றரி) பாவனைக்கு ஏற்ற வகையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது .
ஆகவே தொலைபேசிகள் வெடிப்புகளில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *