தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும், சம்மந்தன்

தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும். அதற்கு நாம் இட­ம­ளிக்கக் கூடாது. நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து ஓர் தூணாக நிற்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்பந்தன் தெரி­வித்தார்.

வட முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வ­ரனது உரைகள் அடங்­கிய ‘நீதி­ய­ரசர் பேசு­கின்றார்’ என்ற நூல் வெளி­யீ­டா­னது நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

எம்­மி­டையே வேறு­பட்ட கருத்­துக்கள் இருக்­கலாம். நாம் வேறு­பட்­டி­ருக்­கலாம். அவற்றை நாம் பேசித் தீர்த்­துக்­கொள்ள வேண்டும். நாம் ஒற்­று­மை­யாக நிற்க வேண்டும். ஒரு­மித்து நிற்க வேண்டும். தமிழ் மக்­க­ளது ஒற்­று­மை­யா­னது தம்­மு­டைய தலை­வி­தியை மாத்­தி­ர­மின்றி இந் நாட்டின் தலை­வி­தி­யையே மாற்றும் என்பதை வெளிக்காட்டியுள்ள நாம் அதனை எப்­போதும் பாது­காக்க வேண்டும்.

தமிழ் மக்­களின் உரி­மைகள் அவர்­களின் உரித்­துக்கள் இலங்கை அர­சாங்­கத்தால் மறுக்­கப்­பட்ட காலத்தில் அதனை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆயு­த­மேந்­திய தமி­ழீழ விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு உத­விய சர்­வதே­சத்­துக்கு, தமிழ் மக்­களின் நீண்ட கால இனப் பிரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கு­ரிய தார்­மீக கடமை உள்­ளது என்­பதை புரிந்­து­கொண்டு செயற்­பட.

சாதா­ர­ண­மாக ஒரு நாடு சுதந்­திரம் அடைய முன்பு அந் நாட்டில் வாழ்­கின்ற மக்­களின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வா­னது முன்­வைக்­கப்­பட்டு அந்த தீர்­வுகள் ஒரு அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்டு அவை நட­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் துர­திர்ஷ்ட வச­மாக இலங்­கையை பொறுத்தவரையில் அவ்வித­மாக நடை­பெ­ற­வில்லை. அவ்­வாறு நடை­பெற்­றி­ருந்தால் 1948 இலங்கை சுதந்­திரம் அடையும் போது தமி­ழர்­க­ளது தேசிய பிரச்­சினைக்கு தீர்வு காணப்­பட்­டி­ருக்கும்.

இது தொடர்­பாக நான் சில விட­யங்­களை கூற வேண்டும். நாடு சுதந்­திரம் அடைய முன்பு இங்கு வந்த டொனமூர் ஆணைக்­குழு முன்பு கண்­டிய தலை­வர்கள் கருத்­துக்­களை கூறும் போது, இந் நாட்டில் சமஷ்டி ஆட்சி முறை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் கூறி­னார்கள். ஆனால் அதனை நாம் ஏற்­க­வில்லை. யாழ்ப்­பா­ணத்து இளைஞர் கழகம், தமக்கு பூரண சுதந்­திரம் கேட்­டது. அதா­வது சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கும் பெரும்­பான்மை இனத்­த­வ­ருக்கும் ஐம்­ப­துக்கு ஐம்­பது கேட்டோம். ஆனால் பிராந்­திய ரீதி­யான அதி­கா­ரங்­களை நாம் ஒரே நாட்­டுக்குள் கேட்­க­வில்லை.

தமிழ் மக்கள் தாம் மிகவும் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பிர­தே­சங்­களில் எமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் எமது இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் பிராந்­திய சு­யாட்சி வேண்டும் என்று கேட்­க­வில்லை. நாங்கள் நாடு பூராக ஐம்­ப­துக்கு ஐம்­பது கேட்டோம். பிராந்­திய சுயாட்சி கேட்­டி­ருந்தால் இந்த பிரச்சினையை அப்­போது தீர்த்­தி­ருக்­கலாம். ஆனால் கேட்­க­வில்லை. இதனால் பிரச்­சினைகள் இப்­போதும் தொடர்­கின்­றன.

நாடு சுதந்­திரம் அடைந்த பிற்­பாடு முதல் நட­வ­டிக்­கை­யாக இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிரஜா உரிமை பறிக்­கப்­பட்­டது. பெரும்­பான்மை இன மக்கள் தமிழ் பிர­தே­சங்­களில் குடி­யேற்­றப்­பட்­டார்கள். கிழக்கு மாகா­ணத்தின் தோற்றம் மாற்­ற­ம­டைந்­தது. அது தற்­போது வடக்கு மாகா­ணத்தில் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அது நிறுத்­தப்­பட வேண்­டிய விடயம். இவ்­வி­த­மான கரு­மங்­களை, நாங்கள் பிராந்­திய சுயாட்­சி­யுடன் அதி­கா­ரங்­களை பெற்­றி­ருந்தால் தவிர்த்­தி­ருக்­கலாம். அது முடிந்த கதை. இதனை கதைப்­பதால் எந்த பிர­யோ­ச­னமும் வரப்­போ­வ­தில்லை.

இன்­றுள்ள பிரச்­சி­னையை எதிர்­நோக்க வேண்டும். நாடு பூரா­கவும் உள்ள மக்கள் இதனை என்ன வித­மாக பெறப் போகின்றோம். சர்­வ­தேச ரீதி­யாக என்­ன­வி­த­மாக அணுகப் போகின்றோம். வட­கி­ழக்கில் இதனை என்னவித­மாக அணு­கப்­போ­கின்றோம் என்­பன தொடர்­பாக முடி­வெ­டுக்க வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

இன்று நாட்டில் எல்லா மாகா­ணங்­களும் கூடிய அதி­கா­ரங்­களை கேட்­கின்­றன. காணி அதி­காரம், சட்ட ஒழுங்கு அதி­காரம் என கேட்­கின்­றார்கள். அந்த விட­யத்தில் நாம் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றோம். இவை தவிர மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீடு இருக்கக்கூடாது எனவும், ஆளு­நரின் அதி­கா­ரங்கள் கட்­டு­ப்ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும் கேட்­கின்­றார்கள். அண்­மையில் தென்­மா­காண முத­ல­மைச்சர் ஆளுநர் பதவி நீக்­கப்­பட வேண்டும் என கூறி­யி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் நாங்கள் யாரையும் பகைக்க வேண்­டி­ய­தில்லை. எல்­லோ­ரு­டனும் நட்­பு­றவை பேண வேண்டும். நியா­யத்தை நீதியை விளக்க வேண்டும். பல்­வேறு நாடு­களில் பல இனம் வாழ்­கின்ற நிலையில் அங்கு எவ்­வி­த­மான ஆட்­சி­மு­றையை பின்­பற்­றி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை விளக்க வேண்டும். அதனை தென்­ப­குதி மக்கள் அறிய வேண்டும். அதனை தற்­போது அவர்கள் அறிந்­து­கொண்டு வரு­கின்­றார்கள். தென்­ப­குதி மக்கள் எல்­லோரும் துவே­ச­மா­ன­வர்கள் இல்லை. துவே­ச­மா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள். ஆனால் அவர்கள் பெரும்­பான்­மையில் இல்லை.
இன்று ஒரு அர­சியல் சாச­னத்தை உரு­வாக்க ஒரு முயற்சி நடை­பெற்று வரு­கின்­றது. அத­னூ­டாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வினை எட்­டு­வ­தற்கு வழி­யி­ருக்­கு­மாக இருந்தால் அந்த சந்­தர்ப்­பத்தை நாம் பயன்­ப­டுத்த வேண்டும். அதனை இழக்க கூடாது. எங்­க­ளு­டைய பங்­க­ளிப்பை செய்ய வேண்டும். அடிப்­படை விட­யங்­களை நாம் அதற்­காக விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. ஆனால் நாங்கள் ஈடு­பட்டு எமது மக்­க­ளுக்கு உரிய பாது­காப்பை, அவர்­க­ளுக்கு உரிய உரிமை­களை அங்­கீக­ரிக்கக்கூடிய வழி இருந்தால் அதனை நாம் இழக்கக்கூடாது. அதனை நாம் தெளி­வாக புரிந்­து­கொள்ள வேண்டும் என்றார்.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *