கோத்தபாயவிற்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமையுள்ளது- அகிலவிராஜ்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவிற்கும் ஹிட்லரிற்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதாக நான் கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது ஒற்றுமை இருவரும் சைவஉணவை மாத்திரம் சாப்பிடுபவர்கள் என்பது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போரில் மக்களை கொடூரமாக சித்திரவதை செய்ததற்கும் பலரை கொன்று குவித்தற்கும் இவரே பிரதான காரணமாவார் ,

ஹிட்லர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை கோத்தபாயவிற்கு இலங்கை பிரஜாவுரிமை கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் அவுஸ்திரிய பிரஜாவுரிமையை கொண்டிருந்தார்,அவர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை பெறுவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை பெறாமல் ஜேர்மனியின் ஜனாதிபதியாக முடியாது என்பதாலேயே ஹிட்லர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவிடமும் இலங்கை பிரஜாவுரிமை இல்லை அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கொண்டுள்ளார் இதன் காரணமாக அவருக்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமையுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *