கிளிநொச்சியில் சிறுத்தையை கொன்றதற்கு குகனி கவலை வெளியிட்டார்

இலங்கையில் திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகரான குகனி கிளிநொச்சியில் சிறுத்தையை கொன்றதற்கு தனது முகநூலில் கவலையை வெளிட்டிருந்தார்,

கிளிநொச்சியில் புலி என்பது என் அறிவுக்கெட்டிய வரை இதற்கு முன் எப்பவும் அறிந்திருக்கவில்லை.

உயிருடன் புலியைப்பிடித்த பின்னர் தான் கொன்றார்கள் என்று அறியும் போது கோபப்படுவதை விட
நான் கிளிநொச்சி வாசி என்பதில் வெட்கப்படுகின்றேன்.
ஒரு அரிய உயிரியை கொன்றிருக்கின்றார்கள்
#அதுவும் #புலியை.
#அடேய் #புலியை #நாங்களே #கொல்லலாமாடா

காட்டிலிருந்து ஒரு சிறுத்தை
நாட்டுக்கு வருகிறது என்றால்
ஓராயிரம் பாலை மரங்களும்
ஓராயிரம் தேக்கு மரங்களும்
ஓராயிரம் முதிரை மரங்களும்
கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு பேராற்றின் குடும்பமே
இறந்துவிட்டது என்று அர்த்தம்
பத்தாயிரம் பறவைகள்
கடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்
நூறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும்
ஆயிரமாயிரம் தேனீக்களும்
செத்துப்போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு போகமல்ல
பல போகங்கள்
பொய்க்கப்போகின்றன என்று அர்த்தம்

மோப்பம் பிழைத்து
வழிதவறி
வந்த அச்சிறுத்தையை கொன்ற நாங்கள்
எங்களுடைய குடும்ப
குழந்தைகளையும் பெண்களையும்
உயிரோடு கொளுத்திக் களித்தோமென்று அர்த்தம்….

 

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *