ஒரு மலைப் பாம்பு மனிதரை எப்படி விழுங்கும்?

ஒரு இந்தோனீசிய பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்றுவிட்டது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இது நம்பமுடியாத அரிதான சம்பவமாக இருந்தாலும், கடந்த ஒரு வருடத்தில் இந்தோனீசியவில் மலைப்பாம்பினால் ஏற்பட்ட மரணங்களில் இது இரண்டாவதாகும்.

54 வயதான வா டிபா எனும் பெண், சுலவேசி மாகாணம் முனா தீவில் உள்ள தனது காய்கறி தோட்டத்திற்கு சென்றபோது காணாமல் போனார்.

ஒருநாள் கழித்து அப்பெண்ணின் காலணியும், அவரின் கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. 30 மீட்டர் அருகில் வீங்கிய வயிருடன் ஒரு மிகப்பெரிய மலைப் பாம்பு படுத்து கிடந்தது.

”காணாமல் போன பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியதாக மக்கள் சந்தேகித்தனர். அதனால் அப்பாம்பைக் கொன்றுவிட்டனர்” என்கிறார் உள்ளூர் காவல்துறை அதிகாரி ஹம்கா.

”பாம்பின் வயிறு அறுக்கப்பட்டது. வயிற்றின் உள்ளே அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.”

பெரும் கூட்டத்தின் முன்பு, பாம்பின் வயிற்றில் இருந்து பெண்ணின் உடல் எடுக்கப்படும் காணொளி இந்தோனீசிய சமூக வலைத்தளத்தில் பரவியது.

மலைப்பாம்பு எப்படி தாக்கும்?

இங்குக் கண்டெடுக்கப்பட்ட மலைப்பாம்பு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் காணப்படும் வகையைச் சேர்ந்தது. இதன் நீளம் 32 அடி வரை இருக்கும். இது மிகவும் பலம் மிக்கது. பதுங்கியிருந்து தனது இரையைத் தாக்கும் இப்பாம்பு, இரையை சுற்றி முறுக்கி நசுக்கும்.

இதனால், சில நிமிடங்களில் இந்த பாம்பிடம் சிக்கிக்கொண்டவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பார்கள்.

தனது இரை முழுவதையும் இந்த பாம்பு உண்ணும். பெரிய இரைகளைக் கூட முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு இதன் தாடை மிகவும் நெகிழ்வானது.

மனிதர்களை மலைப்பாம்புகள் உண்ணும்போது, ”மனிதர்களின் தோல்பட்டை எளிதில் உடையாது என்பதால், தோல்பட்டைக்கு மேல் மனிதர்களில் உடல் பாம்பின் வாய்க்கு உள்ளே செல்வது கடினமானதாக இருக்கும்” மலைப்பாம்பு குறித்த ஆராய்ச்சியாளர் மேரி-ரூத் லோ கூறுகிறார்.

பெரும்பாலான மலைப்பாம்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. எனவே, அரிதாகவே முதலைகள் போன்ற ஊர்வனவற்றைச் சாப்பிடும் என்கிறார் லோ.

பொதுவாக அவை எலிகள் மற்றும் பிற சிறிய விலங்குகளை உண்கின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகு, எலிகளை மலைப்பாம்பு குறி வைக்காது. ஏனெனில், எலிகளிடம் இருந்து கிடக்கும் கலோரி பாம்புக்குப் போதாது.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *