அழிவின் விளிம்பில் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்ணணி பாடசாலைகளில் ஒன்றான கிளி/முருகானந்தா கல்லூரி கடந்தகாலங்களில் பல வியக்கத்தக்க சாதனைகளைப்புரிந்து தற்போது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது . எண்ணிலடங்கா கல்விமான்களையும் பல துறை சார்ந்த வல்லுனர்களையும் உருவாக்கி உள்ளது , தற்போது இப்பாடசாலையின் வளர்ச்சி மிக கவலைக்கிடமாகி வருகிறது .

சில ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயல்களாலும் சில மாணவர்களின் தரக் குறைவான செயற்பாடுகளாலும் படாசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது . இதை கருத்தில் எடுக்க வேண்டிய பாடசாலை நிர்வாகம் பாராமுகமாக இருப்பது கவலைக்கிடமான விடயம் .

கடந்த காலங்களில் , போர்கால சூழ்நிலையிலும் பல வியக்கத்தக்க சாதனைகளை புரிந்து தேசிய மட்டத்தில் 2ம் -3 ம் நிலைகளில் முன்னேறி வந்த பாடசாலை தற்போது பல வசதிகளைக் கொண்டிருந்தும் இப் பாடசாலை  பெறுபேறுகள் கவலைக்கிடமாக உள்ளது.

பாடசாலையின் கல்வியில் அக்கறை காட்ட வேண்டிய மிக முக்கிய பொறுப்பு அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமே உள்ளது .

தற்போதைய பாடசாலை நிர்வாகம் பெற்றோர்களையும் , பழைய மாணவர்களையும் சரியான முறையில் அணுகவில்லை என பல பெற்றோர்கள் குறை கூறுகின்றனர் இதே கருத்தையே பழைய மாணவர்களும் முன்வைக்கின்றனர் .

இதை கருத்தில் கொண்டு பாடாசாலை நிர்வாகம் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் . இதற்கான தீர்வினை கண்டறிந்து பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து பெற்றோர்களையும் பழைய மாணவர்களையும் ஒன்றிணைத்து நல்ல சமூகத்தை உருவாக்க திட சந்தர்ப்பம்பூண்டு இனி வரும் காலங்களில் பல சாதனைகளைப்புரிய வேண்டி நிற்கின்றோம்.

Laisser un commentaire

Votre adresse de messagerie ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

error: Content is protected !!